மாது மது போதை
18-May-2018

யாழ்ப்பாணத்தில் மது போதையில் மோட்டார் சைக்கள் செலுத்தி விபத்துக்களான இரு பெண்களை மீட்டு பொலிஸார் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

பருத்தித்துறை வீதியின் கட்டப்பிராயில் இன்று இரவு  ஏழு மணியளவில் ஒரு ஸ்கூட்டி பைப் மோட்டார் சைக்கிலில் வந்த இரண்டு பெண்கள் அந்த வீதியால் ஆண் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிலுடன் மோதியுள்ளனர்.

இதன் போது இரு பெண்களும் நிலத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் அவர்கள் இருவரும் மது போதையில் நிற்பதை அறிந்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து பெண் பொலிஸ் உத்தியோகத்தரும் போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீதியில் மது போதையில் நின்றிருந்த குறித்த இரு பெண்களையும் மீட்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும்  சோதித்துப் பார்த்ததில் அவர்கள் இருவரும் மது அருந்தியமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் அவர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பொலிஸார் குறித்த பெண்கள் இருவரையும் யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதே வேளை குறித்த பெண்கள் இருவரும் 26 மற்றும் 27 வயதுடையவர்கள் என்றும் தெரிய வருகின்றது. இச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிகள விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஜோதிடம்
தினபலன்
ராகு காலம் 12.05 - 01.05
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
திடீர் யோகம்
புத்துணர்ச்சி
நெருக்கடி
வெற்றி
நினைத்தது
உழைப்பால்
வெற்றி
விருச்சிகம்
வெற்றி
வெற்றி
வெற்றி