சிங்கப்பூர் சிகரட்டுகளுடன் ஒருவர் சிக்கினார்
18-May-2018

சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிங்கப்பூரில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 349 என்ற விமானத்திலேயே இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபரிடம் இருந்த 15,400 சிகரட்கள் உள்ளடங்கிய 77 பொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட சிகரட்டுகள் 770,000 ரூபா பெறுமதியுடையது என கணிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு சிகரட்டுகளை அரசுடமையாக்கியதுடன் சந்தேக நபருக்கு 75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடம்
தினபலன்
ராகு காலம் 12.05 - 01.05
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
திடீர் யோகம்
புத்துணர்ச்சி
நெருக்கடி
வெற்றி
நினைத்தது
உழைப்பால்
வெற்றி
விருச்சிகம்
வெற்றி
வெற்றி
வெற்றி