வடமாகாண கொடியை அரை கம்பத்தில் பறக்க விடவதும், தலைகீழாக பறக்க விடுவதும் எங்கள் இஷ்டம்
23-May-2018

வடமாகாண கொடியை அரை கம்பத்தில் பறக்க விடவதும், தலைகீழாக பறக்க விடுவதும் எங்கள் இஷ்டம்

வடமாகாண சபையின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவதும், தலைகீழாக பறக்க விடுவதும் எங்களுடைய பிரச்சினை அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அதற்காக நடவடிக்கை எடுக்க முடிந்தால் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார எடுக்கட்டும் பார்க்கலாம் என சிவாஜிலிங்கம் சவால்விடுத்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இந்த சவாலை விடுத்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று வடமாகாண சபையின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியிருந்தார்.

இது தொடர்பாக வினவிய போதே சிவாஜிலிங்கம் குறித்த பதிலை அளித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், வடமாகாண சபையின் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுவதும், தலைகீழாக பறக்க விடுவதும் எங்களுடைய பிரச்சினை. 

 

அதனை நாங்கள் பார்த்து கொள்வோம். அதேபோல் மாகாண பாடசாலைகளில் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும் கேட்டோம்.

 

அதுவும் எங்களின் பிரச்சினை அது தெரியாமல் கருத்து கூறும் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் நான் கேட்கிறேன் முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

ஜோதிடம்
தினபலன்
ராகு காலம் 12.05 - 01.05
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
திடீர் யோகம்
புத்துணர்ச்சி
நெருக்கடி
வெற்றி
நினைத்தது
உழைப்பால்
வெற்றி
விருச்சிகம்
வெற்றி
வெற்றி
வெற்றி